சிதம்பரம்: கே.தொழூர் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மண்டலாபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிதம்பரம் அடுத்த கே.தொழூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் நேற்று நிறைவு பெற்றது. அதனையொட்டி நேற்று சிறப்பு பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி பல்வேறு சிறப்பு ஹோமங்கள், பூர்ணாகிதி, மகா தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது.