பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
செஞ்சி: செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவில் திருப் பணிகள் செய்ய உள்ளனர். முதல் கட்டமாக 6 லட்சம் ரூபா# மதிப்பில் மூலவர் கோபுரம், வசந்த மண்டபம், மகா மண்டபம், கிருஷ்ணவேணி தாயார் சன்னதி கட்ட நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அறக்கட்டளை ரங்கராமானுஜம், வழக்கறிஞர்கள் ஆத்மலிங்கம், ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, திருப்பணி குழுவினர் ராமமூர்த்தி, ஜானகிராமன், எட்டியாபிள்ளை, சுப்பிரமணி, அருணகிரி, பெருமாள் மற்றும் ஸ்தபதி பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.