பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
திருவாரூர்: திருவாரூர் அருகே பழையவளம் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவிலில் கும்பாபி ஷேகத்திற்கு பாலாலய நிகழ்ச்சியில் பல்வேறு பூஜைகள் நடந்தது.கோவில் வளர்ச்சிக்கு நிதி உதவிகளை வழங்க விருப்பம் உள்ளவர்கள் கோவில் நிர்வா கத்தைதொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். திருவாரூரில் இருந்து கிழக்கே 10 கி.மீ., தொலைவில் பழையவளம் கிராமம் உள்ளது. இங்கு பல நுாறு ஆண்டுகள் பழையான ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோ விலில் கன்னிமூலை கணபதி,மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர், ஆதி துர்க்கை உள் ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளது. இக்கோவில் முதன் முதலாக 1955 ஆம் ஆண்டு சித்திரை புணர்பூச நட்சத் திரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் சீத்தாராமன் ஐயர், நடராஜ ஐயர், அப்பு ஐயர், மகாதேவன் ஐயர் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் பராமரித்து வந்தவர்கள் 38 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 1993 ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தினர். அதன் பின் டெல்லி, மும்பை, கல்தத்தா, காசி, சென்னை உள்ளிட்ட பகுதிக ளில் குடிபெயர்ந்துள்ள ஐயர் குடும்ங்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் குல தெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது கோவிலில் பல்வேறு முக்கிய விஷேசங்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. கடந்த 2003 செப்டம்பர் 7 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வரும் நவம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடத்த பல்வேறு பூஜைகளுடன் பா லாலய நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளர்ச்சிக்கு உதவிட விரும்புவர்கள் நிர்வாகக்குழு ஸ்ரீதர் என்பரை 94440–22431 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.