மதுரை : மதுரை எல்லீஸ்நகர் யமுனா வீதி ஆனந்தேஸ்வரர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை(மார்ச் 25) நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 7 மணிக்கு மேல் மகாசங்கல்பம், மாலை 5 மணிக்கு மேல் வேதகோஷம், இரவு 7 மணிக்கு விக்ரஹ பிரதிஷ்டை நடக்கிறது.நாளை காலை 9.30 முதல் 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் ஆஸ்தீக சபா தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சேதுவெங்கட்ராமசர்மா, பொருளாளர் ஹரிஹரசுப்ரமணியன் செய்துள்ளனர்.