பதிவு செய்த நாள்
24
மார்
2015
05:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப். 6ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 11 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம்முன்பு எழுந்தருளினர். சிவாச்சார்யார்கள் பங்குனித் திருவிழாவிற்கான கொடியேற்றினர். கொடிகம்பத்தின் அடிப்பகுதியில், பால், புனிதநீர் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனைகள் நடந்தது. திருவிழா நம்பியார் ரமேஷ் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. கோயில் துணை கமிஷனர் செல்லத்துறை, கண்காணிப்பாளர் பால லட்சுமி பணியாளர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நடைபெறும் ஏப். 8 வரை காலையில் தங்க சப்பரம், தங்க பல்லக்கிலும், இரவில் தங்கமயில், தங்ககுதிரை, வெள்ளி பூத வாகனம், அன்னம், சேஷம், வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடாய், பச்øகுதிரை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலிப்பார்.
திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக இன்று(மார்ச். 25) பிள்ளையார் சப்பரம், மார்ச் 30ல் கைபாரம் நிகழ்ச்சி, மார்ச் 31ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ஏப். 3ல் பங்குனி உத்திரம், ஏப். 4ல் சூரசம்ஹார லீலை, ஏப். 5ல் பட்டாபிஷேகம், ஏப். 6ல் திருக்கல்யாணம், ஏப்.ல் தேரோட்டம், ஏப். 8ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது. தினம் மாலையில் கலை நிகழ்ச்கிகள் நடக்கிறது.
50 ஆண்டுகளுக்குப்பின்பு குடை சுருட்டி வாகனம்: திருவிழாக்காலங்களில் சுவாமிக்கு முன்பு குடை சுருட்டிகளை மனிதர்கள் துõக்கிச் செல்வது வழக்கம்.50 முருக பக்தர் ஒருவர் ஒரு லட்சத்தில் புதிய குடை சுருட்டி வாகனத்தை கோயிலுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அதில் மகர சுருட்டி, மீன் சுருட்டி, விசிறி சுருட்டி, சூரியன், சந்திரன், சேவல், மயில், மெகா சைஸ் பூ சக்கர குடை சுருட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்குப்பின்பு நேற்றுமுதல் இந்த வாகனம் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் கொண்டு செல்லப்பட்டது.