ஷீரடி சாய்பாபா கோவில் ஏப்., 1 முதல் கட்டண தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2015 10:03
ஷீரடி: ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில், கட்டண தரிசன முறை அமல்படுத்தப்படுகிறது. ஏப்., 1 முதல் அமல்படுத்தப்படும் இந்த முறையில், சாதாரண பக்தர்களும், கட்டணம் செலுத்தி, வி.ஐ.பி., தரிசனம் செய்யலாம். கட்டண தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், தங்கள் அடையாள அட்டையை காட்டவேண்டும். அனைத்து நாட்களிலும் இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். சாதாரண தரிசனத்திற்கு, 100 ரூபாய்; ஆரத்திக்கு, 300 ரூபாய் மற்றும் அதிகாலையில் நடக்கும் காகட ஆரத்திக்கு, 500 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.