சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடக்க உள்ளது. இதற்கான கொடியை ராசுஅம்பல காவல் குமாரர்கள் சுமந்து வைகை ஆற்றில் பூஜை செய்து கோயிலுக்கு வர, அங்கு கோயில் முன் அமைந்த திருபலிபீட மூன்றுமாத கம்பத்தில் பூஜாரி கணேசன் கொடியேற்றினார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர்கள் சுந்தரம், தர்மராஜ் செய்திருந்தனர்.