பதிவு செய்த நாள்
25
மார்
2015
11:03
ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவிலில், வரும் 3ம் தேதி, பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை, பிராமணர் தெருவில் உள்ள பத்மாவதி, சுந்தரவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், வரும் ஏப்., 3ம் தேதி, பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஐந்நுாறு ஆண்டுகள் பழமையான இந்த கோவில், சீரமைக்கப்பட்டு, கடந்த 1987ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நித்திய பூஜை, மார்கழி உற்சவம், சித்திரை பிரம்மோற்சம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் உள்ளிட்ட உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் ஏப்., 3ம் தேதி, வெள்ளிக்கிழமை, காலை 9:00 மணிக்கு, ஸ்தபன திருமஞ்சனம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. மாலை 4:00 மணியளவில், திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.