முன்குடுமீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2015 11:03
திருக்கழுக்குன்றம்: பொன்விளைந்தகளத்துார், மீனாட்சி அம்பாள் உடனுறை முன்குடுமீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று இரவு 7:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும்; நாளை மாலை 6:00 மணிக்கு பவழக்கால் விமானத்திலும்; 27ம் தேதி மாலை 6:00 மணி அதிகார நந்தி வாகனத்திலும்; 28ம் தேதி மாலை 6:00 மணி புஷ்ப நாக வாகனத்திலும்; 29ம் தேதி மாலை 6:00 மணி ரிஷப வாகனத்திலும்; 30ம் தேதி மாலை 6:00 மணி யானை வாகனத்திலும் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வருவார். 31ம் தேதி காலை 7:30 மணி ரத உற்சவம் நடைபெறுகிறது. ஏப்.1ம் தேதி மாலை 6:00 மணி சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருவார். ஏப்.2ம் தேதி மாலை 6:00 மணி தொட்டில் உற்சவம் நடைபெறும். ஏப்.3 காலை 8:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.