கம்பம் : காமயகவுண்டன்பட்டியில் உள்ள கருமாரியம்மன் கோயில் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்குடம், பூக்குழி இறங்குதல் நடந்தது. காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில் விழாவிற்கான கொடியேற்றம் மார்ச் 17 ல் நடந்தது. நேற்று காலை முக்கிய நிகழ்வாக பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காமயகவுண்டன்பட்டி மட்டுமல்லாது சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.