Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழக்கரை சுப்பிரமணியசுவாமி ... சூரிய பிரபை வாகனத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் பவனி! சூரிய பிரபை வாகனத்தில் காஞ்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2015
05:03

சபரிமலை: சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்.,3ம் தேதி பம்பையில் ஆராட்டு நடக்கிறது. பங்குனி மாதம் உத்திரம் நாளில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நடைபெறும் வகையில் சபரிமலையில் பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது.

Default Image
Next News

இந்த ஆண்டு திருவிழாவுக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் ஐயப்பனின் திருநடையில் சமர்ப்பிக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு சுத்திகலச பூஜைகள் நடத்தினார். காலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை போன்றவை நடைபெற்றது. 8.30 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடிப்பட்டத்துக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்தினார். தொடர்ந்து மேள தாள் முழங்க மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி கொடிப்பட்டத்தை எடுத்து கோயிலை வலம் வந்தார். கொடிமர சுவட்டில் தந்திரி கண்டரரு பூஜைகள் நடத்திய பின்னர் 9.38 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு, சரண கோஷங்கள் முழங்க கொடியேற்றினார். இதை தொடர்ந்து பத்து நாள் திருவிழா தொடங்கியது. இனி வரும் நாட்களில் தினமும் மதியம் உற்சவபலி நடைபெறும். ஏப்.,2ம் தேதி நள்ளிரவில் சரங்குத்தியில் பிரசித்தி பெற்ற பள்ளி வேட்டை நடைபெறும். 3ம் தேதி காலை ஒன்பது மணிக்கு சுவாமி ஆராட்டுக்காக பம்பைக்கு யானை மீது எழுந்தருளுவார். 12 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். மாலை மூன்று மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்தக்கு புறப்படும். இரவு பத்து மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar