பதிவு செய்த நாள்
27
மார்
2015
12:03
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில், நந்திகேஸ்வரர்,- சுயசாம்பிகை தேவி, திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. பள்ளிக்கரணையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கயிலை சிவகணங்களின் தலைவரும், சைவாசாரியார்களுள் முதல் குருவுமான நந்திகேஸ்வரருக்கும், சுயசாம்பிகை தேவிக்கும், நாளை (28ம் தேதி) திருக்கல்யாணம் நடக்கிறது. அதை முன்னிட்டு, நாளை அதிகாலை 5:00 மணிக்கு, 108 வலம்புரி சங்கு பிரதிஷ்டையும், மகா சங்கல்பமும் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள், காலை 8:30 மணிக்கு, கலசாபிஷேகம், நந்ததிகேஸ்வரருக்கு 108 சங்காபிஷேம் நடக்கின்றன. மாலை 4:30 மணிக்கு சீர் கொண்டு வருதல், மாலை 6:30 மணிக்கு, திருமண சடங்கு, அதை தொடர்ந்து மாங்கல்ய தாரணம் நடக்கின்றன. பின், சுவாமி நடன காட்சியும், உற்சவர் ஆதிபுரீஸ்வரர் வீதிஉலாவும் நடக்க உள்ளன.