பெரிய காலாப்பட்டு கோவிலில் பங்குனி உத்திர விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2015 12:03
புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவில் 43-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வரும் 2ம் தேதி வரை தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா ஏப்., 3ம் தேதி காலை 6:00 மணிக்கு துவங்குகிறது. 7:00 மணிக்கு செடல் உற்சவம், 1:30 மணிக்கு பாற்சாகை வார்த்தல், 4:30 மணிக்கு தேர் உற்சவம், 4ம் தேதி தெப்பல் உற்சவம், 5ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.