பதிவு செய்த நாள்
27
மார்
2015
12:03
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தெற்கு காடு மலை அடிவாரத்தில், "ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்து, வழிபாடு செய்தனர்.ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி, தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது, கனவில் ஷீரடி சாய்பாபா கனவில் வந்து, கல் உடைச்சான் மலை அடிவாரத்தில் குடியிருந்து வருவதாக கூறியுள்ளார். அதே பகுதியில் வசிக்கும், ஐந்து பேரின் கனவிலும், சாய்பாபா கனவில் வந்து பேசியுள்ளார். அதனால், தெற்கு காடு மலை அடிவாரத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர். ஒன்றரை அடி உயரத்தில், ஷீரடி சாய்பாபா ஸ்வாமி சிலை பிரதிஷ்டை செய்து, ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை செய்தனர். பின், விநாயகபுரம் விநாயகர் கோவிலில் இருந்து, ஷீரடி சாய்பாபா சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மலை அடிவாரத்தில் வைத்து வழிபாடு செய்தனர்.ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வழிபாடு செய்தனர். மேலும், ஷீரடி கோவிலில் உள்ளதை போன்று, பெரிய அளவில் கோவிலை கட்ட முடிவு செய்துள்ளனர்.