Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இலங்கை மண்பானை தேர்: தொண்டி ... பங்குனி உத்திரம்: பழனிக்கு சிறப்பு பஸ்கள்! பங்குனி உத்திரம்: பழனிக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ணாரி மாரியம்மன் வீதி உலா: இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பண்ணாரி மாரியம்மன் வீதி உலா: இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி!

பதிவு செய்த நாள்

31 மார்
2015
12:03

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் நகர்பகுதியில், பண்ணாரி அம்மன் சப்பரத்தில் வீதி, வீதியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று இரவு கோவில் முன் கம்பம் நடும் விழா நடக்கிறது. சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பண்டிகையான குண்டம் விழா, கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து, பண்ணாரி அம்மன் சப்பரத்தில் வெள்ளி கவசத்துடன் சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், தொட்டம்பாளையம், பகுத்தம்பாளையம், தத்தப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா சென்றது.சத்தியமங்கலம் நகர் பகுதிக்கு வந்தது. வடக்குபேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலில் பண்ணாரி அம்மன் சப்பரம் தங்கியது. நேற்று சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, கடைவீதி, அக்ரஹாரம், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதியில், பண்ணாரி மாரியம்மன் வீதி, வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சத்தியமங்கலத்துக்கு சப்பரத்தில் வந்த பண்ணாரி மாரியம்மனை, இப்பகுதி பக்தர்கள் வானவேடிக்கையுடன் வரவேற்றனர்.

நேற்று வீதி உலாவின் இறுதி நாளாகும். சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில், நேற்று காலை வந்த பண்ணாரி மாரியம்மனுக்கு, பெண்கள் தண்ணீர் ஊற்றியும் தேங்காய், பழம் வைத்து பூஜை செய்தும் வணங்கினர்.பெரும்பாலான பெண்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் புடவை அணிந்து, கையில் வேப்பிலையுடன், அம்மனை வணங்கினர். இதையடுத்து கோணமூலை, காந்தி நகர், ரங்கசமுத்திரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் வீதி உலா சென்று, ரங்கசமுத்திரம் எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள மேற்குப்புற முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு, கோட்டுவீராம்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் தங்கினார். இன்று வீதி உலாவின் இறுதி நாளாகும். இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்டு பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவாபாளையம், புதுபீர்கடவு, பட்டரமங்கலம், ராஜநகர் வழியாக இரவு பண்ணாரி கோவிலை அடைகிறது.அம்மன் வந்ததும், கோவிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அலுவலர்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar