தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உண்டியலில் 24 லட்சத்து 36 ஆயிரத்து 811 ரூபாய் வசூலாகி உள்ளது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷ் கூறியதாவது: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஏழு நிரந்தர உண்டியல்கள் உள்ளன. திருவிழாவின் போது 22 இடங்களில் தற்காலிக உண்டியல்கள் அமைக்கப்பட்டன. தற்காலிக உண்டியல்களில் 13 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. ஏழு நிரந்தர உண்டியல்களும் எண்ணப்பட்டன. இதில் 11 லட்சத்து 36 ஆயிரத்து 811 ரூபாய் பணம், 114 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி இருந்தது, என்றார்.