திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலின், ரகசிய அறைகள் நேற்று திறக்கப்பட்டன. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள ஆறு ரகசிய அறைகள் பல ஆண்டு காலமாக திறக்கப்படாமல் உள்ளன. இந்த ரகசிய அறையில் புதையல் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த அறைகளை திறக்கக் கோரி, பக்தர்கள் ஐகோர்ட்டில் மனு செய்தனர். ரகசிய அறைகளைத் திறக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதிகள் என்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன் ஆகியோரை சுப்ரீம் கோர்ட், பார்வையாளர்களாக நியமித்தது. நீதிபதி கிருஷ்ணன் தலைமையில் துணை தலைமைச் செயலர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், கோயிலில் உள்ள ஆறு ரகசிய அறைகளில் நான்கு அறைகளை நேற்று திறந்தனர். இந்த அறைகளை பார்வையிடுவதற்கு பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. "ரகசிய அறையில் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தால் அது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு அந்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டிலும், பத்திரிகையாளர்களிடமும் தெரியப்படுத்தப்படும் என்றார், நீதிபதி கிருஷ்ணன்.