பதிவு செய்த நாள்
03
ஏப்
2015
12:04
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 25ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றமும், இரவு அதிகார நந்தி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஆறு நாட்கள் சந்திர பிரபை, பூதவாகனம், நாகவாகனம், ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனம், கயிலாய வாகனம், குதிரை வாகனம் வீதியுலா மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.பி., தேரோட்டத்தை துவக்கி வைத்தார். கோவில் திருப்பணிக்குழு தலைவர் குபேரன் செட்டியார், கோவில் ஆய்வாளர் செல்வராஜ், செயல் அலுவலர் பாலசுப்ரமணியராஜன், கணக்கர்கள் பேராதரன், சிவஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.