பதிவு செய்த நாள்
04
ஏப்
2015
12:04
செஞ்சி ஒன்றியம் சோ.குப்பம் கிராமத்தில் உள்ள சாந்த முனீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு 2ம் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, புற்று மண்பூஜை, கடம் ஸ்தாபனம்,முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இரவு 10 மணிக்கு சாமிகண் திறப்பும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு கோ பூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, தத்வார்ச்சனை, இண்டாம்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 9.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும், 10.10 மணிக்கு முனீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.
பூஜைகளை செம்மேடு லஷ்மண் சர்மா செய்தார். தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான்,ஒன்றிய செயலாளர்விஜயகுமார்,ஊராட்சி தலைவர் ராஜேந்திரன்,விழா குழுவினர்முருகன், சேகர், சுந்தரமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.