பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
02:04
கோவை : கோவை மாநகர ஆர்.எஸ்.எஸ்., சார்பில், மாமன்னர் ராஜேந்திர சோழன் முடி சூட்டிய, 1,000வது ஆண்டு விழா, ராம்நகர் வாணிஸ்ரீ ஹாலில் நடந்தது. கன்னியாகுமரி கோட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சீனிவாச கண்ணன் பேசியதாவது: தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் மகன்தான் ராஜேந்திர சோழன். முதன்முதலில், கடற்படை அமைத்த பெருமை, இவரை சாரும். கி.பி., 1,014 ஆண்டில் மன்னராக முடிசூட்டினார். முதலில், இலங்கையின் மீது, போர் நடத்தி வென்று, இலங்கையை ஆட்சி செய்த தமிழக மன்னன் என்ற பெருமையை பெற்றார்.மதுரை,கேரளா உள்ளிட்ட தென்பகுதி முழுவதும், தன் கட்டுப்பாட்டு க்குள் கொண்டு வந்தார். கங்கையை கடந்து சென்று, பல பகுதிகளில் போர் செய்து, வெற்றியுடன் திரும்பியதே, கங்கை கொண்ட சோழபுரம் உருவாக காரணம். இந்தோனேஷியா, சுமத்ரா தீவில், கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு கடல்வழி வணிகத்தை மேம்படுத்தினார். வலிமையான, வளமான ஆட்சி புரிந்த, ராஜேந்திர சோழன் பெருமைகளை, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். முருகேசன் தலைமை வகித்தார். ஆடிட்டர் ஹரீஷ் குமார் முன்னிலை வகித்தார். கோவை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி சுகுமார் உள்ளிடடோர் பங்கேற்றனர்.