சரஸ்வதியின் வாகனம் அன்னப்பறவையாக இருந்தாலும் சில நூல்கள் மயிலையும் வாகனமாக குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில் சில திருத்தலங்களிலும், மும்பையிலும் மயில் மீது அமர்ந்துள்ள சரஸ்வதியை தரிசிக்கலாம். தவிர ஆட்டின் மீது அமர்ந்துள்ள சரஸ்வதியின் திருவடிவங்களும் உண்டு. பவுத்தர்கள் சரஸ்வதியை சிம்மவாகனத்தில் எழுந்தருளச் செய்து வழிபட்டனர்.