உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் ஜப்பான் பக்தர்கள் யாக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2025 11:08
ராமேஸ்வரம்; உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் ஜப்பான் பக்தர்கள் யாக பூஜை செய்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜப்பான் டோக்கியோ சேர்ந்த சுவாமி பாலகும்ப குருமணி, இவர் டோக்கியோவில் சிவ ஆசிரமம் வைத்துள்ளார். இந்த ஆசிரமத்திற்கு ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்திய கலாச்சாரம், பண்பாடுகளை அறியவும், ஹிந்து கோயில்களில் வழிபாட்டு முறைகளை கண்டு தரிசிக்க சுழற்சி முறையில் பக்தர்களுடன் இந்தியாவிற்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றார். அதன்படி நேற்று பாலகும்ப குருமணி தலைமையில் 65 ஜப்பான் பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். இவர்கள் முதலில் தனியார் மகாலில் உலக நன்மைக்காக யாக பூஜை செய்து கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த பக்தர்கள் குழு மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை, திருத்தணி உள்ளிட்ட பல முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.