நல்லூர் கரைய கருப்பசாமிக்கு 100 கிடாய்கள் வெட்டி படையல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2025 10:07
நத்தம்; நத்தம் அருகே கோட்டையூர் ஊராட்சி நல்லூரில் கரையகருப்பசாமி கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடி படையல் விழா நடந்தது. இதையொட்டி ஊரின் அருகே கண்மாய் கரையில் உள்ள கரைய கருப்புசுவாமிக்கு வர்ண பூமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 100 கிடாய்கள் கிராமத்தார்கள் மூலம் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடபட்டது.பின்னர் 60 சிப்பம் அரிசியை கொண்டு 15 -க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சாதம் தயார் செய்யப்பட்டு நேற்று கறி குழம்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நல்லூர் ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.