லக்ஷ்மி நரசிம்மர் கனகவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2015 11:04
திண்டிவனம்: திண்டிவனத்தில் லக்ஷ்மி நரசிம்மர் கனகவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் சுவாமிக்கும், கனகவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பூஜைகளை சீனுவாசன், ரகு, ஸ்ரீதர் பட்டாச்சாரியார்கள் நடத்தினர். தொடர்ந்து நேற்று பகல் 12:00 மணிக்கு, சுவாதியை முன்னிட்டு லக்ஷ்மி நரசிம்மர் உற்சவ மூ ர்த்திக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர்.