காளத்தீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2015 11:04
புதுச்சேரி: காளத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள காளதீஸ்வரர் கோவில் (செட்டிகோவில்) பிரமோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. தினம் ரிஷப வாகனம், சந்திர பிரம்பையில் வீதியுலா நடந்தது. நேற்று பஞ்சமூர்த்திகள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.