பதிவு செய்த நாள்
07
ஏப்
2015
01:04
ஓசூர் : ஓசூர் அடுத்த மத்திகிரி, கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில், அரசு ஐ.டி.ஐ., அருகேயுள்ள, மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவ விழா, கடந்த, 5ம் தேதி துவங்கி, வரும் 10 தேதி வரை நடக்கிறது. 5ம் தேதி காலை, 5 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி, நவக்கிரஹ ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கோட்டை மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நேற்று காலை, 9.30 மணிக்கு நடந்தது. காலை, 7 மணிக்கு, யாக பூஜை ஹோமம், விசேஷ திரவிய ஹோமம், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு, 7 மணிக்கு, பசவேஸ்வர பூஜை நடந்தது.நகராட்சி சேர்மன் பாலகிருஷ்ணாரெட்டி, துணைத்தலைவர் ராமு, தி.மு.க., நகர செயலாளர் மாதேஸ்வரன், டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, அ.தி.மு.க., ஒன்றிய பொருளாளர் சிட்டி என்கிற ஜெகதீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, விழா கமிட்டி தலைவர் வாசுதேவன், தொழிலதிபர் சிவண்ணா, ஒன்னல்வாடி பஞ்சாயத்து தலைவர் பீரப்பா, மத்திகிரி முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் ரவிக்குமார் மற்றும் பொதுமக்கள் செய்தனர். வரும், 10 ம் தேதி, அம்மன் பல்லக்கு உற்சவ நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.