பதிவு செய்த நாள்
08
ஏப்
2015
01:04
வில்லியனூர்: வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேகம் இன்று காலை நடக்கிறது. வில்லியனூர் ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரை வட புறத்தில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள் வளாகத்தில் விநாயகர், பரிவார ÷ தவதைகள், அன்னபூரணி, நவக்கிரகம் பைரவர், சூரியன், சந்திரன், அய்யனார் கோவில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கடந்த 6ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் மாலை முதற்கால பூஜை துவங்கியது. நேற்று காலை 8 மணிக்கு மேல் இரண்டாம் கால பூஜை, மாலை 5 மணிக்கு மேல் மூன்றாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று 8ம் தேதி காலை 5 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 9 மணிக்கு கடம் புற ப்பாடு, அதனை தொடர்ந்து விமானம் மற்றும் ராஜகோபுரம் கும்பாபிஷேகம், மூலவர் பரிவார கும்பாபிஷேகம் நடக்கிறது.