காரைக்கால் : காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம், கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 26, 27ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 28ம் தேதி யானை வாகனத்திலும், 29ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடந்தது. 31ம் தேதி திருக்கல்யாணம், 2ம் தேதி தேர் திருவிழா நடந்தது. தெப்பல் உற்சவத்தில், சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.