தாயமங்கலம்: தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இக் கோயிலில் திருவிழா மார்ச்29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். பொங்கல் விழா கடந்த 5ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் இரவு மின் அலங்காரத்துடன் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 7.40 மணிக்கு பால்குடம், மாலை 6மணிக்கு ஊஞ்சல், இரவு 10.15 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடந்தது. இன்று இரவு 8 மணிக்கு தேவஸ்தான தீர்த்தவாரியுடன் கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் செய்திருந்தார்.