பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
11:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் பூ மிதி திருவிழாவில், பக்தி பரவசத்துடன் நேற்று பக்தர்கள் பூ க்குண்டம் இறங்கினர். பங்குனி மாதம் வழக்கமாக நடைபெறும் போடிபாளையம் பத்ரகாளியம்மன் பூ மிதி திருவிழா நேற்று நடந்தது. இதையெ õட்டி, கடந்த மாதம் 23ம் தேதி இரவு நோன்பு சாட்டப்பட்டது. 24ம் தேதி இரவு திரவுபதியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு கொலு வைக்கப்பட்டது. தொடர்ந்து 25ம் தேதி அதிகாலை சக்தி கும்பம் முத்தரிக்கப்பட்டது. அடுத்து 27ம் தேதி இரவு பக்தர்களால் பூ÷ வாடு எடுக்கப்பட்டது. 30ம் தேதி ஐவர் மலை தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இம்மாதம் 1ம் தேதி ஆஞ்சநேயர் கோவில் தீர்த்தமும், 3ம் தேதி வெள்ளியங்கிரி, தெய்வகுளம் காளியம்மன், கோவில், நல்லூத்து, பழநி, திருமூர்த்திமலை, நல்லிகவுண்டன்பாளையம், அவல்புகந்துறை ஆகிய இடங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அடுத்தும் 5ம் தேதி புலிவேடம் அணிந்து ஆட்டு கிடா எடுத்தல், 6ம் தேதி மீன்குளத்தி பகவதிய ம்மன் கோவில், கோவிந்தமலை, கோடந்தூர் மாரியம்மன் கோவில், அவினாசி, கொடுமுடி, குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில், கன்னிய õகுமரி, தஞ்சாவூர், பெரியாறு, மலைக்கோட்டை, நன்னனூர் கோமதீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, நேற்றுமுன்தினம் காலை, 10:00 மணிக்கு அம்மன் சப்பர ஊர்வலமும், மாலை, 5:00 மணிக்கு தர்மராஜா கோவிலில் பச்சை போடும் வைபவமும், 6:00 மணிக்கு பூ குண்டம் திறப்பு, இரவு 9:00 மணிக்கு பூ குண்டம் வளர்த்தல், வாணவேடிக்கை 11:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை அக்னி கும்பம் முத்தரித்து, காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல் ஆரம்பமானது. இதில் அம்மனுக்கு விரதமிருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் பூ குண்டத்தில் இறங்கி, பூ மிதித்தனர். பூ மிதி திருவிழாவை காண, நூற்றுக்கணக்கான பக்தர்கள், குண்டத்தை சுற்றிலும் கூடியிருந்தனர். குண்டம் இறங்கும் வைபவம் முடிந்ததும், காலை 9:00 மணிக்கு அன்னதானம், மாலை 4:00 மணியளவில் மாவிளக்கு எடுக்கப்பட்டது. திருவிழாவையொட்டி, பத்ரகாளியம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சக்தி கும்பம் க ங்கையில் விடுதல், நாளை மகா அபிேஷகம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.