சிவகாசி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2015 11:04
சிவகாசி: சிவகாசியில் பங்குனி பொங்கல் தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுந்தனர். சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா கடந்த மார்ச் 29 ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் அம்பிகை பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்., 5ல் நடந்தது. அடுத்த நாள் அம்மனுக்கு பக்தர்கள் அக்னி சட்டி , கயர் குத்தி, பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவாக தேரோட்டம் நேற்று முன்தின மாலை துவங்கியது. அம்பாள் தேருக்குள் எழுத்தருள நேற்று காலை நாட்டமைகள் ரதம் வடம் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மாலையில் சின்ன தேரில் விநாயகர் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தார். அதன் பின் மாரியம்மன் எழுந்தருளிய தேரை எராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் நிலைக்கு வந்தபின் அன்ன வாகனத்தில் அம்பிகை எழுந்தருளினார். தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.