திண்டிவனம்: கோவடி கிராமத்தில் உள்ள எட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. திண்டிவனம் புதுச்சேரி ரோட்டில் உள்ள கோவடி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான எட்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் உதவியுடன் 80 லட்சம் ரூபாய் செலவில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, மூவலர் விமானம், பரிகாரமூர்த்திகள் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. முன்னதாக நடந்த யாகசாலை பூஜைகளை, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் கோவில் குருமூர்த்தி சி வாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.