பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
11:04
செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா பெருவளூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ÷ காகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை 50 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து புதுப்பித்தனர். இக்÷ காவில் கோபுரங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதை முன்னிட்டு கடந்த 7ம் தேதி காலை விசேஷ சந்தி, அஷ்டப ந்தனம் சாற்றுதல் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில் கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் பங்கேற்றார். நேற்று காலை 6: 30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 8.30 மணிக்கு யாத்ராதான சங்கல்பம், 8.45 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.20 மணிக்கு கலச புறப்பாடும், 9.45 மணிக்கு கோவை பேரூர் ஆதினம் இளைய பட்டம் கயிலை புனிதர் தவத்திரு மருதாசல அடிகளார் தலைமையில் கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், வழக்கறிஞர் ராமச்சந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான், ஊராட்சி தலைவர் ராதிகா ரேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் தனபாக்கியம் அண்ணாமலை, துணை தலைவர் ÷ தவகி அழகேசன், திருப்பணிக்குழு தலைவர் ஜம்புலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தராஜி, மேலாளர்கள் முனியப்பன், மணி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.