பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
12:04
திருத்தணி :கல்யாணராமர் கோவிலில், 48வது ஆண்டு விழாவை ஒட்டி, ராமர், சீதா, லட்சுமணன் வீதியுலா நடந்தது.திருத்தணி நகராட்சி, 13வது வார்டில் உள்ள அனுமந்தாபுரத்தில், கல்யாணராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி மாதம் ராமநவமி விழா நடந்து வருகிறது. அந்த வகையில், 48வது ராமநவமி விழா, கடந்த மாதம் 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலை என, இரு வேளைகள் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், முக்கிய நிகழ்ச்சியாக, ராமர், சீதா, லட்சுமணன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில், அனுமந்தாபுரம், சன்னிதி தெரு, மேட்டுத் தெரு உட்பட, நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.