அவிநாசி: கருவலூர் மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கடந்த 4ல் கொடியேற்றத்துடன் துவங் கியது. நேற்று காலை மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில், தேருக்கு எழுந்தருளினார். மாலை 4:00 மணிக்கு விநாயகர் தேரோட்டம் நடந்தது. 5:00 மணிக்கு அம்மன் தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது. கொறட்டு வாசல் வரை சென்ற தேர், நிறுத்தப்பட்டது. மீண்டும் தேரோட்டம் இன்றும், நாளையும், மாலை 3:00 மணிக்கு துவங்கும். அவிநாசி போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.