பதிவு செய்த நாள்
10
ஏப்
2015
11:04
பவானி : பவானி, அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர் மற்றும் நெரிஞ்சிபேட்டை பகுதிகளில் உள்ள செல்லியான்டி அம்மன் குண்டம் திருவிழா நடந்து வருகிறது. இக்கோவிலில், கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. பின் கம்பம் நடப்பட்டது. கடந்த, 6ம் தேதி இரவு, கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், அதனை அடுத்து பூங்கரகமும், மறுநாள் இரவு குண்டம் கண் திறத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.காவிரியில் இருந்து அம்மை மற்றும் முப்போடு அழைத்தல் நிகழ்ச்சிக்கு பின், பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதில், ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை என இரண்டு செல்லியாண்டியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். பின், பொங்கல் வைத்தல் மற்றும் அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.