பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
11:06
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மஹா வராஹி அம்மனுக்கு ஒன்பதாம் ஆண்டு ஆஷாட நவராத்தி கலை விழா நாளை 30ம் தேதி துவங்குகிறது. நாளை காலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் செய்யப்பட்டு மாலையில் இனிப்பு அலங்காரம் செய்யபட்டு வராகி அம்மன் காட்சியளிக்கிறார். தொடர்ந்து ஆறு மணிக்கு பாஸ்கரன் குழுவினரின் மங்கள இசை, ராஜேஸ்வரி நாட்டியாலயா பாரதி சிஷ்யை உமாமகேஸ்வரி மற்றும் நடன குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றது. ஜூலை ஒன்றாம் தேதி மாலை மஞ்சள் அலங்காரத்திலும், ஆறு மாணிக்கு துரை செந்தில் குழுவினரின் 25 நாதஸ்வரம் 25 தவில் கலைஞர்களின் நாதாலாய சங்கமம் நடக்கிறது. இரண்டாம் தேதி மாலை குங்குமம் அலங்காரத்திலும், ஏ.கே.சி., நடராஜன் கிளாரிநெட், அம்பிகாபிரசாத் வயலின், சங்கரசுப்ரமணியன் மிருதங்கம், தீனதயாளன் மோர்சிங்குடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. மூன்றாம் தேதி மாலை சந்தன காப்பு அலங்காரத்திலும், ஆறுமணிக்கு சென்னை தியாகராஜன் பாட்டு, தில்லை முத்துக்குமரன் வயலின், திருவாளபுத்தூர் செந்தில்குமார் மிருதங்கம், ஆலந்தூர் ராஜ்கணேஷ் கஞ்சிராயுடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. நான்காம் தேதி மாலை தேங்காப்பூ அலங்காரத்திலும், ஆறு மணிக்கு பத்மஸ்ரீ கலைமாமணி சீர்காழி சிவசிதம்பரம் பாட்டு, முல்லைவாசல் சந்திரமவுலி வயலின், சங்கரசுப்பிரமணியன் மிருதங்கம், ராஜேந்திரன் மோர்சிங்குடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஐந்தாம் தேதி மாலை மாதுளை அலங்காரத்திலும், ஆறு மணிக்கு ராம் கீபோர்டு, ராகவன் மிருதங்கம், வெங்கடசுப்ரமணியன் வயலின், பரமசிவம் கஞ்சிராயுடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஆறாம் தேதி மாலை நவதான்யம் அலங்காரத்திலும், ஆறு மணிக்கு சாõலியமங்கலம் ராமதாஸ் வீணை, திருச்சி ராம்பிரசாத், தஞ்சை சங்கரசுப்ரமணியன் மிருதங்கம், புதுக்கோட்டை சோலைமலை கடம், கோபி கஞ்சிரா, மலைக்கோட்டை தீனதயாளன் மோர்சிங்யுடன் இசை நிழ்ச்சி நடக்கிறது. ஏழாம் தேதி மாலை வெண்ணை அலங்காரத்திலும், ஆறு மணிக்கு தூய் யுவகலா பாரதி அச்சனா நாராயணமூர்த்தி குழுவினரின் பரத நாட்டியம் கலை நிகழ்ச்சி நடக்கிறது. எட்டாம் தேதி மாலை கனிவகை அலங்காரத்திலும், ஆறு மணிக்கு பத்மஸ்ரீ கத்ரி கோபால்நாத் சாக்ஸபோன், கன்யாகுமாரி வயலின், திருச்சி ஹரிகுமார் மிருதங்கத்துடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஒன்பதாம் தேதி மாலை காய்கறி அலங்காரத்திலும், ஆறு மணிக்கு பக்தி பாடகர் வேதையன் குழுவினரின் பக்தி பாடல்களுடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. பத்தாம் தேதி மாலை புஷ்பம் அலங்காரத்திலும், ஆறு மணிக்கு திரைப்பட பின்னணி பாடகி மஹதி பாட்டு, மீரா சிவகுமார் வயலின், சங்கரசுப்ரமணியன் மிருதங்கம், மலைக்கோட்டை தீனதயாளன் மோர்சிங்குடன் இசை நிழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேரளா செண்டை வாத்தியத்தியம், கரகாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம், வானவேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலாவும், பூச்சொரிதலும் நடக்கிறது.