நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: ஜூலை 12ல் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2011 11:06
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 12ம் தேதி நெல்லை, பாளை தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்ட திருவிழா வரும் 12ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி நெல்லை மற்றும் பாளை தாலுகாக்களில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அலுவலக வேலை நாளாகும். உள்ளூர் விடுமுறை அன்று நெல்லை, பாளை தாலுகாக்களில் மாவட்ட கருவூலங்கள், சார் நிலை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்க குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.