வழிபாடுகளைப் போன்றே சிவனுக்குரிய திருவிழாக்களையும் ஐந்து வகையாகக் கொண்டாடுவர். சிவன் படியளந்து பரிபாலிக்கும் வைபவத்தை உணர்த்தும் ஸ்ரீபலி ஆராதனை போன்றவை நாள் திருநாளாகும். சோமவார வழிபாடு போன்றவை வார உற்சவமாகும். சதுர்த்தி, அஷ்டமி, பிரதோஷ வழிபாட்டு ஆராதனை போன்றவை பட்ச உற்சவமாகும். மாதப்பிரவேசம். அமாவாசை, பவுர்ணமி, வழிபாடுகள் மாத உற்சவமாகும். திருவாதிரை, கார்த்திகை, தீபம், மாசி மகம் போன்றவை வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் வருட உற்சவமாகும். இப்படி ஐந்து பருவங்களில் சில வழிபாட்டு விழாக்கள் அனுசரிக்கப்படுகின்றன.