திருவானைக்காவலில் நடைபெறும் உற்சவமிது. கோயிலின் ஐந்து பிராகாரங்களிலும் சிவபெருமான் வலம்வந்து அன்பருக்கு அருள்பாலிக்கும் விழாவாகும். திருவையாறு, திருக்கடவூர், திருக்கற்குடி, ஆகிய தலங்களில் ஐந்து பிராகாரங்கள் உள்ளன. திருவானைக்காவலில் நடைபெறும் விழாவில் சோமாஸ்கந்த மூர்த்திக்கு பெண் அலங்காரம் செய்தும், அம்பிகைக்கு சிவ வேடம் அணிவித்தும் உலாவருகின்றனர். பாவம் தீர்க்கும் இந்தப் பஞ்சப்பிராகார உற்சவத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.