மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் மலைப்பாதையில் ஜோதி பா எனும் மலைக்கோயில் உள்ளது. இங்குள்ள இறைவன், கேதாரேஸ்வரர். இவர் பெரிய மீசையுடனும், தலைப்பாகையுடனும் காட்சி தருகிறார். இக்கோயிலில் தரையில் சிதறிக்கிடக்கும் குங்குமத்தை பக்தர்கள் உடல் முழுதும் பூசிக்கொள்கின்றனர். இதனால் ஆரோக்யம் நிலைக்கும் என்பது நம்பிக்கை.