தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் 8 கி.மீ. யில் அமைந்துள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் சித்திரை கடைசியில் துவங்கி எட்டு நாட்கள் நடக்கும். திருவிழாவில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். முல்லையாற்றங்கரையில் மேளதாளத்துடன். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருபத்திரண்டு நாட்கள் விரதமிருந்து அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக, வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது அற்புதக் காட்சி.