திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது வல்ல நாடு. இங்குள்ள தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய் முதல் 12 நாள், கொடைத் திருவிழா நடக்கிறது. அப்போது உருவம் எடுத்தல், வேடம் புனைந்து வீதியில் வந்து ஆடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். வேதாளத்தின் முன் மது பொங்குவது அற்புதமான காட்சி. நெய், எலுமிச்சம்பழம் சேர்ந்த கலவைதான் மது. அம்மனுக்கு தீபாராதனை நடக்கும்நேரத்தில் சரியாக இந்தக் கலவை பொங்குவது வியப்பானது. அந்த சமயத்தில் பெண்களும் ஆண்களும் குலவையிடுகின்றனர்.