Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தமிழ் புத்தாண்டு வழிபாடும் சிறப்பும்! தமிழ் புத்தாண்டு வழிபாடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம்!

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
12:04

காலடி: காலடியில் கனகதாரா யாகம்: ஆதிசங்கரர்,  இந்து மதத்தின் குலகுருவான இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் மேற்கொண்டிருந்த போது, ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷாம் தேஹி என்று பிக்ஷை கேட்டார்.  அந்த பெண் தன்னிடமிருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார். இந்த தானம் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்படையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். இதனால் மகிழ்ந்த மகாலட்சுமி, இவர் 19 ஆம் ஸ்லோகம் பாடிய போது, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.

இதன் அடிப்படையில்  கேரளா மாநிலம் காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கனகதாரா யாக மண்டபத்தில் ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை கனகதாரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் மற்றும் கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகளால் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகளால், அட்சய திரிதியான ஏப்ரல் 21ம் தேதி, காலை 9 மணிக்கு மகாலட்சுமி விக்ரகத்திற்கு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. கனகதாரா யாகம் முடிந்ததும், அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நெல்லிக்கனி மற்றும் எந்திரத்தை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

கனகதாரா எந்திரம்    ரூ. 351
தங்க நெல்லிக்கனி    ரூ. 12,001
வெள்ளி நெல்லிக்கனி    ரூ. 2001
பிராமண போஜனம்    ரூ. 3,001
லெட்சுமி நாராயண அபிஷேகம்    ரூ. 17,001
பிராமண தட்சிணை    ரூ. 1001
அன்னதானம்        ரூ. 6001
கனகதாரா அர்ச்சனை    ரூ. 101
நெல்லிக்கனி பாரா    ரூ. 51
நெல்லிக்கனி சமர்ப்பணம்    ரூ. 10

தொடர்புக்கு: காப்பிள்ளி ஸ்ரீகுமார் நம்பூதிரி, மேனேஜிங் டிரஸ்டி, ஸ்ரீகிருஷ்ணன் கோயில், காலடி - 683 574, எர்ணாகுளம் மாவட்டம். போன்: 093888 62321, 093495 53051

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar