Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குண்டூரில் சீனிவாச திருக்கல்யாணம்! ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் அவதி! ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செண்பகவல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செண்பகவல்லியம்மன் கோயில் தேரோட்டம்  கோலாகலம்!

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
04:04

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  கோவில்பட்டியில் செண்பகவல்லியம்மன், பூவனநாத சுவாமிகள் கோயில் பங்குனி திருவிழா, ஏப்.,5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி , வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தது. 9 ம் நாளில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரங்களுடன், தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், கலெக்டர் ரவிக்குமார் தேர் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பகல் 12 மணிக்கு நிலையை அடைந்தது. பத்தாம் நாளான ஏப்.,14ல் தீர்த்தவாரி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை இணை கமிஷனர் அன்புமணி, நிர்வாக அதிகாரி பூவலிங்கம், தக்கார் அருணாச்சலம் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar