கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடந்த மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கெங்கவல்லி அருகே, கடம்பூர் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 19ம் தேதி மாரியம்மன் கோவில் வளாகத்தில், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 26ம் தேதி ஸ்வாமி சக்தி அழைத்தல் நடந்தது. தினமும் கட்டளை தாரர்கள் சார்பில், ஸ்வாமிக்கு பொங்கல் படையல் செய்து வழிபாடு நடத்தினர். நேற்று காலை 12.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டத்தை, ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம், கெங்கவல்லி தாசில்தார் பாப்பாத்தி ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். முக்கிய வீதி வழியாக வீதி வலம் வந்த தேர், மாலை 5.45 மணியளவில் கோவிலை வந்தடைந்தது.