பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
11:04
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை புளியம்பட்டி, திருநகரம் சாலியர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்.,7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று பொங்கல் விழா நடந்தது. ஏராளமான பெண்கள் கோயில் முன் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இன்று அக்னி சட்டி நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் 21, 51,101 வகை அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவர். கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை உறவின் முறை தலைவர் சுப்பிரமணியம், செயலர் ரமேஷ் பாபு தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.போக்குவரத்து மாற்றம்: இக்கோயில் அக்னி சட்டி மற்றும் பூக்குழி நடைபெற உள்ளதையொட்டி, விருதுநகர் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளை காலை 7 மணி வரை விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பஸ்கள் அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து இருந்து கல்குறிச்சி, மல்லாங்கிணறு, பாலவநத்தம் வழியாக விருதுநகர் சென்றடையும் என, டி.எஸ்.பி., தனராஜ் தெரிவித்துள்ளார்.