கேரள மாநிலம் திருச்சூருக்குத் தென்மேற்கே திருப்பரையார் ராமர் ஆலயம் உள்ளது. இங்கு அனுமன் அரூபமாக திருஷ்டா சீதா, திருஷ்டா சீதா (கண்டேன் சீதையை) என்று சொல்லிக் கொண்டு இரவும் பகலும் ஆலயத்தை வலம் வருவதாகவும்; அதைக் கேட்டு ராமபிரான் மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது. மேலும், இவ்வாலய மடப்பள்ளியில் எவ்வளவு பெரிய பாத்திரத்தில் பிரசாதம் தயார் செய்தாலும், பணியாளர் ஒருவரே எவர் உதவியுமின்றி பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து விடுகிறார். காரணம், பிரசாதம் இறக்கும்போது அனுமனும் ஒரு கை கொடுத்து உதவுவதாகச் சொல்லப்படுகிறது.