பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டிகர்-கால்காரோடில் 15 கி.மீ. தூரத்தில் அழகிய இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள ஒரு குன்றில் மாதா சண்டி மந்திர் என்ற கோயிலின் சண்டி மாதா தரிசனம் தருகிறாள். உடல் ஆரோக்கியத்தைத் தருபவர் துர்கை, செல்வத்தை தருபவர் லட்சுமி, கல்வியைத் தருபவர் சரஸ்வதி என்பர். இந்த மூன்று தேவியர்களும் இணைந்த ஒரே உருவம் தான் சண்டிமாதா. இவர் சக்தியின் அம்சமாக விளங்குகிறார். வெளிநாடுகளில் வேலை கிடைக்க இவரிடம் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சண்டிகர் செல்ல சென்னையிலிருந்து ரயில் வசதி உள்ளது.