வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே உள்ள புன்னம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, மார்ச் 30ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கொடுமுடி காவிரி தீர்த்தம் கொண்டு வந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.